20.08.2026ஆம் திகதி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தினை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்ற தெய்வீகத்திருக்கூட்ட நிகழ்வில் நான்காம் நாள் எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கணேசா அறநெறிப்பாடசாலை,விழிசிட்டி ஞானவைரவர் ஆலய அறநெறிப்பாடசாலை, மாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை,தவளக்கிரி முத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை,சைவ வாலிப சங்க அறநெறிப்பாடசாலை மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.





















