01.09.2026 ஆம் திகதி நல்லூரில் வட மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்தும் பாரம்பரிய கலைசங்கமம் நிகழ்வில் எமது பிரதேச செயலக பிரிவு சார்பாக கலைநிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் வயலின் இசை,புல்லாங்குழல் இசை,வள்ளி திருமணம் இசை நாடகம் ஆகிய நிகழ்வுகள் தெல்லிப்பழை முத்தமிழ் கலை மன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















