தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' போட்டிகளில்    வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 '' அரசபிரிவு ''  போட்டிகளில் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. தேசிய தொலைநோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டத்துடன் இணங்கி தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறனுடன் பங்களித்து மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் நோக்குடனும், ''நிலையான அபிவிருத்தி'' ஊடாக எதிர்காலத்தில் உலக சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவாகவும், அரச நிறுவனங்களை ஈர்த்தெடுத்து தயார்ப்படுத்தும் நோக்குடன், தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களுக்கிடையில் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' என்ற தலைப்பின் கீழ் போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டியில் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமானது பங்குபற்றியதுடன்பிரதேச செயலகத்தினது நோக்கமாகிய ''பிரதேச மக்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் உன்னதமான ஓர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக சேவையை உறுதி செய்தல்'' என்பதற்கு அமைவாக தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையினை விருத்தி செய்து, புதிய பரிமாண முறையில் சேவையின் வடிவத்தினையும், தரத்தினையும், விரைவினையும் அதிசிறந்ததொன்றாக மாற்றியமைத்தமைக்காகவும், சக்தி விரயக்கட்டுப்பாடுகள் மற்றும் இயற்கைமுறையிலான சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத அபிவிருத்திகளை ஏற்படுத்தி பசுமை உற்பத்திதிறன் எண்ணக்கருவின் அடிப்படையிலான செயற்பாடுகளை வெளிப்படுத்தியமைக்கமைவாகவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையினை ஏற்படுத்தி நன்மதிப்புக்களை பெற்றமைக்கமைவாகவும், நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் சிறந்த உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்புக்களை மெருகேற்றி கவர்ச்சிகரமான முறையில் செயற்பட்டமைக்கமைவாகவும், புள்ளிகள் வழங்கப்பட்டு தேசிய ரீதியில் 2ம் இடத்தினைப் பெற்று எமது பிரதேசத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.

311312313

Scroll To Top