எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டிற்கான ஒளிவிழாவானது 19.12.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சங்கீதா கோகிலதர்சன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் அதீதிகளாக அருட்திரு ரீ.ஈ.தேவராஜன் அடிகளார் அவர்களும் மற்றும் அருட்திரு வி. ராஜ்குமார் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டனர். காலை 9:30 மணிக்கு தேவ வழிபாடுடன் ஆரம்பமான இந் நிகழ்வானது அதீதிகளின் ஆசிகளுடனும் கலைநிகழ்வுகளுடனும் பரிசளிப்பு நிகழ்வுகளுடனும் நடைபெற்றது.
























