72வது சுதந்திர தின விழா நிகழ்வானது 4 மாசி 2020 அன்று "பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு" என்ற தொனிப் பொருளின் கீழ் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. விழாவின் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலர் திரு. ச. சிவஸ்ரீ அவர்களால் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக அலுவலக வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.மர நடுகை நிகழ்வானது அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் பரவலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை சாசனம்

Scroll To Top