03.09.2026 ஆம் திகதி  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி  ஆலய மகோற்சவ காலத்தினை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்று வருகின்ற தெய்வீகத்திருக்கூட்ட நிகழ்வில்  நேற்றைய தினம் எமது பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட  குருந்தடி இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய அறநெறிப்பாடசாலை, பழம்பதி ஆலய அறநெறிப்பாடசாலை, சிவன்அறநெறிப்பாடசாலை,மாவை இந்து பொதுச்சேவைக் கழக  அறநெறிப்பாடசாலை, அண்ணமார் அறநெறிப்பாடசாலை மற்றும் ஸ்ரீ துர்க்காதேவி ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு எமது பிரதேச செயலகத்தினுடைய மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

nallurthir 2WhatsApp Image 2026 10 07 at 11.01.20nallurthir 2ii

குடியுரிமை சாசனம்

Scroll To Top