சமுர்த்தி பயனாளிகள் கௌரவிப்பு

 

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வும் 18.06.2019 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது வாழ்வாதார உதவி வழங்கல் வீட்டுதோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் இளம் விவசாயிகளுக்கான கௌரவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கி நடைபெற்றது. அதனடிப்படையில் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பாக முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இளம் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மேலும் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 39  வீட்டுத்தோட்ட பயனாளிகள் தலா ரூபா 5000 வீதமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் 30 சமுர்த்தி பயனாளிகளுக்கு மக்கள் பங்களிப்புடன் வாழ்வாதார உதவிகளாக விவசாய உபகரணங்களும்  வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலபொதுமக்களும் கலந்துகொண்டனர்.

IMG ecc8818d8a5ceb2b6f6663e94f21d059 V IMG eff585b2f66aad05257da98ef30b744d V IMG d676a33e46d17b2708b59e8c1f6e827f V IMG c52d1bce1ee55f7f28d5a94471a69cfc V IMG a0f49878ce3a494a8d0290002063510b V

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top