News & Events
- විස්තර
2026.07.20 ஆம் திகதி திங்கட்கிழமை 9.00 ஆரம்பமான இந்நிகழ்வில் ,சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பாரம்பரிய உணவுகள் மற்றும் சுதேச வைத்தியப் பொருட்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மற்றும் சுதேச வைத்தியப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த உணவுக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை நடைபெற்றது .
எமது பிரதேசத்தைச் சேர்ந்த சிறுதொழில் முயற்சியாளர்களின் திறமைகளையும் உற்பத்திகளையும் வெளிக்கொணரும் நோக்கில் இந்நிகழ்வில், பல்வேறு சுவையான பாரம்பரிய உணவுகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சுதேச வைத்தியப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்ப ட்டன.






- විස්තර
17.07.2026 அன்று மாவிட்டபுரம் பகுதியில் கிராம மட்ட ஆடிப்பிறப்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் பாரம்பரியப்படி ஆடி மாதப் பிறப்பைக் குறிக்கும் இந்நாளில் ஆடி கூழ் கொடுக்கப்பட்டு பாரம்பரிய முறையில் இந்நிகழ்வைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.



- විස්තර
2026.07.15 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில், அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய அலுவலக உத்தியோகத்தர்ககளை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் போட்டிகளில் கடின உழைப்புடன் பங்கேற்று, சிறப்பான சாதனைகளை ஈட்டிய உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டனர்.அத்துடன் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி உற்சாகப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.





- විස්තර
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் (CITIZENS MIRROR INDEX 1.0) மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்கள் 16.07.2026 அன்று மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் .
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் மாவட்ட ரீதியில் 82.76 புள்ளிகளையும் AA தரத்தினை பெற்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் மாவட்ட ரீதியில் 5ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


- විස්තර
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலைத்துறைக்கு சேவையாற்றிய மூத்த கலைஞர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சுகநலன் விசாரித்து கெளரவிக்கும் "கலைஞர் சுவதம்" நிகழ்வில் 07.07.2026 மற்றும் 10.07.2026 ஆம் திகதிகளில் கீரிமலை ,மயிலிட்டி,அளவெட்டி , மாதனையை சேர்ந்த நான்கு கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

















