News & Events
- Details
50 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்றினை கட்டிக் கொள்வதற்குாிய அனுமதி கடிதத்தினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய,வைத்திய நிபுணா் ஸ்ரீ பவானந்தராஜா அவா்கள் 03.08.2026 அன்று எமது அலுவலகத்தில் வழங்கி வைத்தாா்.

- Details
பிரதேச கலாசாரப் பேரவை பொதுக் கூட்டம் மற்றும் கலாசார அதிகார சபை அங்குரார்ப்பண கூட்டங்கள் 01.08.2026 சனிக்கிழமை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.அதன் பதிவுகள்




- Details
கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் " மனித மாண்பு நிறைந்த நேர்மையான சமூகம் " எனும் தொனிப்பொருளில் வசாவிளான் குட்டியப்புலம் அபிராமி அறநெறிப்பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வளவாளராக ஓய்வு பெற்ற விரிவுரையாளர்திருமதி.மு.விஜயகுமாரி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வில் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.மேலும் இவ் அறநெறிப்பாடசாலை புதிதாக உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.




- Details
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் நடாத்தப்படுகின்ற தேசிய கலை இலக்கிய விழாவுக்கான பிரதேச மட்டப் போட்டிகள் 31.07.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.




- Details
J/244 கிராமத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மனித நேயம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு 30-07-2027 அன்று சமூக பராமரிப்பு கிளையின் ஒழுங்கு படுத்தலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், உளவளத்துணையாளர்,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















