News & Events
- Details
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவானது 22.02.2021 திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் திருமதி சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ அவர்கள் பிரதம விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்.
- Details
யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று வரும் நிலையில் 29.01.2021 செவ்வாய்க்கிழமை காலை தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுத்தலைவருமான கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
- Details
தெல்லிப்பளை பிரதேச செயலக 2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.01.2021) காலை தெல்லிப்பளை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
- Details
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசத்திற்கான பொதுமக்களில் BC படிவம் சமர்ப்பிக்காதவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே BC படிவம் சமர்ப்பிக்காதவர்கள் தற்போது தேர்தல்கள் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலை பார்வையிட்டு 2020ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை உட்சேர்ப்பதற்கு பின்வரும் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.
Read more: மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேச மக்களுக்கானது
- Details
தெல்லிப்பளை பிரதேச வாழ் மக்களே
தற்போது எமது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு, கொல்லங்கலட்டி, அளவெட்டி, தெல்லிப்பளை, கூவில் ஆகிய பிரதேசங்களில் 8 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இத் தொற்றானது மேலும் அதிகளவில் பரவலடையாதிருப்பதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.



















