News & Events

50 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்றினை கட்டிக் கொள்வதற்குாிய அனுமதி கடிதத்தினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய,வைத்திய நிபுணா் ஸ்ரீ பவானந்தராஜா அவா்கள் 03.08.2026  அன்று எமது அலுவலகத்தில் வழங்கி வைத்தாா்.

diaster diva1

பிரதேச கலாசாரப் பேரவை பொதுக் கூட்டம் மற்றும் கலாசார அதிகார சபை அங்குரார்ப்பண கூட்டங்கள்   01.08.2026 சனிக்கிழமை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.அதன் பதிவுகள்

hindumeeting1hindumeeting3hindumeeting2

hindumeeting4

கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் " மனித மாண்பு நிறைந்த நேர்மையான சமூகம் " எனும் தொனிப்பொருளில்  வசாவிளான் குட்டியப்புலம் அபிராமி அறநெறிப்பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வளவாளராக ஓய்வு பெற்ற விரிவுரையாளர்திருமதி.மு.விஜயகுமாரி அவர்கள்  கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வில் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.மேலும் இவ் அறநெறிப்பாடசாலை புதிதாக உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

hindu3hindu2hindu1hindu4

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் நடாத்தப்படுகின்ற தேசிய கலை இலக்கிய விழாவுக்கான பிரதேச மட்டப் போட்டிகள் 31.07.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. 

ilakiyam1ilakiyam2ilakiyam3ilakiyam4

J/244 கிராமத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான   மனித நேயம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு 30-07-2027 அன்று சமூக பராமரிப்பு கிளையின் ஒழுங்கு படுத்தலில்  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், உளவளத்துணையாளர்,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ss02sso3WhatsApp Image 2026 08 28 at 17.06.25

Subcategories

Scroll To Top