News & Events
- Details
2026.09.08 அன்று பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி மல்லாகம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 20 பயனாளிகள் பங்குபற்றினர்.



- Details
08.09.2026 மற்றும் 09.09.2026 ஆம் திகதிகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் யா/ தையிட்டி கணேசா வித்தியாலயம் மற்றும் , யா/ வீமன்காமம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும் யா/ அளவெட்டி சீனன்கலட்டி வித்தியாலய மாணவர்களுக்கும் ,யா/ வலித்தூண்டல் றோ.க.த வித்தியாலய மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.


- Details
03.09.2026 ஆம் திகதி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தினை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்று வருகின்ற தெய்வீகத்திருக்கூட்ட நிகழ்வில் நேற்றைய தினம் எமது பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட குருந்தடி இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய அறநெறிப்பாடசாலை, பழம்பதி ஆலய அறநெறிப்பாடசாலை, சிவன்அறநெறிப்பாடசாலை,மாவை இந்து பொதுச்சேவைக் கழக அறநெறிப்பாடசாலை, அண்ணமார் அறநெறிப்பாடசாலை மற்றும் ஸ்ரீ துர்க்காதேவி ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு எமது பிரதேச செயலகத்தினுடைய மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



- Details
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்களின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026” 04.09.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
தெல்லிப்பழை பிரதேசத்தின் கலை வடிவங்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.முக்கிய அம்சமாக இவ் ஆண்டிற்கான பிரதேச கலைச்சுடர் விருது மூவருக்கு வழங்கப்பட்டது. ஒப்பனைக் கலையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த திரு. ஐயாத்துரை பத்மதாஸ் அவர்களுக்கு “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வாத்தியக்கலையில், குறிப்பாக ஆர்மோனியம் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் மல்லாகம் கிழக்கைச் சேர்ந்த திரு. சிவநாதன் றஜீவன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், வயலின் வாத்தியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அளவெட்டி தெற்கைச் சேர்ந்த திருமதி நிக்ஸ்சனா கோகிலரூபன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி வைக்கப்பட்டது.பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.






- Details
03.09.2026 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு அதிகாரிகள் பங்குபற்லுடன் , இளவாலை வடக்கு கிராமத்தில் நடைபெற்ற சமுதாய சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சி.



















