News & Events

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளானது 04.01.2020 சனிக்கிழமை ஆரம்பமானது. 4, 5 ஆம் திகதிகளில் ஆண்கள் பெண்களுக்கனா உதைபந்தாட்டம், கராத்தே, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து கழகங்களும் பங்குபற்றியதுடன் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 01.01.2020 அன்று பிரதேச செயலாளர் திரு ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலைகளில் விளையாட்டில் ஈடுபடும் 24 வீரர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் மற்றும் 100 மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கான நிதிப் பங்களிப்பானது ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு க.கணேசதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

The Oli Vizha for the year 2019 of our Divisional Secretariat was held on 19.12.2019 at the Divisional Secretariat Conference Hall chaired by Assistant Divisional Secretary Mrs. Sangeetha Kokilatharshan. The guests of the event were Rev.T.E.Thevarajan and Rev.V.Rajkumar were also present. The event, which began with the worship of the Lord at 9:30 am, was held with the blessings, extravaganza and prize giving.

2020 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9:30 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது முதல் நிகழ்வாக தேசிய கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக பிரதேச செயலாளரால் மரக்கன்று நடும் நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

உத்தியோகத்தர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்காகவும் வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை தயார்ப்படுத்தி வேலையினை வினைத்திறனான முறையில் புரிவதற்கும் ஏற்ற வகையில் பிரதேச செயலாளரின் ஏற்பாட்டிலும் அவரது தலைமையிலும் பிரதேச செயலக உத்தியோத்தர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்க வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தவர் சின்மயா விஷன் சுவாமி, சுவாமி சிதாகாசானந்தா அவாகள். சுவாமிகள் சிறந்த கருத்துக்களை வழங்கியதுடன் உத்தியோகத்தர்களால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் கருத்துக்களையும் வழங்கியிருந்தார். இந் நிகழ்வில் உததியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டதுடன் பயனையும் பெற்றனர்.

Subcategories

Scroll To Top