News & Events
- Details
தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம்
தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கடல் சார் வளங்களை பாதுகாத்தலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவகற்றலும் எனும் செயற்றிட்டம் மிகவும் சிறப்பாக 31.05.2019 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


- Details
கணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை ஆரம்பம்
பதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளடக்கப்பட்ட தரவு முறையினை உபயோகித்து இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்குமான பிறப்பு விவாகம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கும் புதிய மக்கள் சேவை 31.05.2019 திகதியன்று எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலக பிரதேச செயலாளலர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பொது மக்கள் சிலருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனூடாக மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எமது பிரதேச செயலக பதிவாளர் பிரினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.


- Details
இலவச மருத்துவ முகாம்
மத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினதும் இணை அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 29.05.2019 காலை 8.30 முதல் 01.00 மணிவரைக்கும் கலைவாணி சனசமூக நிலையம் தந்தை செல்வாபுரத்தில் இடம்பெற்றது. இதில் J/230, J/231 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்நத 100 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அதுமட்டுமல்லாது இந் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுனர் வைத்திய கலாநிதி திரு. சந்திரகுமார் அவர்கள் கலந்துகொண்டு முதிவர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான ஆலோசணைகளையும் வழங்கினார். நிகழ்வில் கலந்துகொண்டு கண்ணாடி தேவையான முதியவர்களுக்கு இலவச கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.






- Details
இலவச மருத்துவ முகாம் - குரும்பசிட்டி
மத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , தெல்லிப்பளை வைத்திய சுகாதார அதிகாரி பணிமனையினதும் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் இணை அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 27.05.2019 திங்கட்கிழமை காலை 8.00 முதல் 01.00 மணி வரைக்கும் குரும்பசிட்டி கலைஞானி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் J/242, J/243 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்நத 60 இற்க மேற்பட்ட முதியவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். இம் முகாமில் இரத்தப் பரிசோதனை , கண் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மருத்துவ அறிக்கை, வாய் சுகாதாரம், இரத்த அழுத்தம் ,தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்குதல் போன்ற பல இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.






- Details
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' போட்டிகளில் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 '' அரசபிரிவு '' போட்டிகளில் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. தேசிய தொலைநோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டத்துடன் இணங்கி தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறனுடன் பங்களித்து மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் நோக்குடனும், ''நிலையான அபிவிருத்தி'' ஊடாக எதிர்காலத்தில் உலக சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவாகவும், அரச நிறுவனங்களை ஈர்த்தெடுத்து தயார்ப்படுத்தும் நோக்குடன், தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களுக்கிடையில் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' என்ற தலைப்பின் கீழ் போட்டிகள் இடம்பெற்றன.
இப்போட்டியில் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமானது பங்குபற்றியதுடன், பிரதேச செயலகத்தினது நோக்கமாகிய ''பிரதேச மக்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் உன்னதமான ஓர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக சேவையை உறுதி செய்தல்'' என்பதற்கு அமைவாக தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையினை விருத்தி செய்து, புதிய பரிமாண முறையில் சேவையின் வடிவத்தினையும், தரத்தினையும், விரைவினையும் அதிசிறந்ததொன்றாக மாற்றியமைத்தமைக்காகவும், சக்தி விரயக்கட்டுப்பாடுகள் மற்றும் இயற்கைமுறையிலான சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத அபிவிருத்திகளை ஏற்படுத்தி பசுமை உற்பத்திதிறன் எண்ணக்கருவின் அடிப்படையிலான செயற்பாடுகளை வெளிப்படுத்தியமைக்கமைவாகவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையினை ஏற்படுத்தி நன்மதிப்புக்களை பெற்றமைக்கமைவாகவும், நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் சிறந்த உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்புக்களை மெருகேற்றி கவர்ச்சிகரமான முறையில் செயற்பட்டமைக்கமைவாகவும், புள்ளிகள் வழங்கப்பட்டு தேசிய ரீதியில் 2ம் இடத்தினைப் பெற்று எமது பிரதேசத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.



















