News & Events

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் சிஹினா இலங்கை (SHINA Sri Lanka) வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம், மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், வேலைவாய்ப்பு ஆதரவு அலகு (Employment Support Unit) ஊடாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சி, 2026  செப்டெம்பர், மாதம் 02 ம் திகதி பருத்தித்துறை  நாகர் கோவில்  முன்றலில் அழகிய  இயற்கையான இடத்தில்  இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு,தெல்லிப்பழை  பிரதேச செயலகப் பிரிவில், சமூக சேவைகள் திணைக்களத்தின்   சமூக சேவை உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம், மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பு வழங்குநர்களுடன் இணைத்து, அவர்களின் பொருளாதார சுயநிறைவை மேம்படுத்துதல், உடல் மற்றும் மனநல நலன்களை வலுப்படுத்துதல், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதாகும்.

நிகழ்வில்   மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டவர்கள் என்றும், அவற்றை வெளிப்படுத்தி பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இத்திட்டம் அமைகிறது என்றும்  மனிதவள மேம்பாட்டு அலுவலர், எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான தகுதிகள், முன்னேற்பாடுகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக பயனுள்ள வழிகாட்டல்களையும் தனது தொழில்முறை அனுபவங்களையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.நிகழ்வின்போது, பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அவர்கள் பயன்படுத்திய உத்திகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்போது தொழில் வழங்குநர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும், பங்கேற்பாளர்களின் தன்னம்பிக்கை, குழு உணர்வு மற்றும் தனிப்பட்ட நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட ஆளுமை விருத்தி ,ஊக்கமளிப்பு போன்ற விளையாட்டுக்கள் மற்றும் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும், அவர்கள் சமூகத்தில் சுறுசுறுப்பான முறையில் பங்கேற்பதற்கான  வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் இந்நிகழ்வு முக்கிய பங்காற்றியதுடன், பங்கேற்பாளர்களிடமிருந்து சாதகமான வரவேற்பையும் பெற்றுக்கொண்டது இந் நிகழ்வில்  சமூகபராமரிப்பு கிளை உத்தியோகத்தர்கள் மற்றும்  உளவளத்துணையாளர், மற்றும்  மனிதவள  மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாற்றுதிறனாளிகள் 40 நபர்கள் பங்கு பற்றினர்.

sso3sso5sso4

sso2.jpgsso1

 

01.09.2026 ஆம் திகதி நல்லூரில் வட மாகாண கல்வி  அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்தும்  பாரம்பரிய கலைசங்கமம் நிகழ்வில்  எமது பிரதேச செயலக பிரிவு சார்பாக கலைநிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் வயலின் இசை,புல்லாங்குழல் இசை,வள்ளி திருமணம் இசை நாடகம் ஆகிய நிகழ்வுகள் தெல்லிப்பழை முத்தமிழ் கலை மன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

nallur2nallur1nallur3

11.08.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  9.00 ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த விற்பனைச் சந்தை நடைபெற்றது .

foodfestivel2 ifoodfestivel2 ii

20.08.2026ஆம் திகதி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி  ஆலய மகோற்சவ காலத்தினை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்ற தெய்வீகத்திருக்கூட்ட நிகழ்வில் நான்காம் நாள் எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கணேசா அறநெறிப்பாடசாலை,விழிசிட்டி ஞானவைரவர் ஆலய அறநெறிப்பாடசாலை, மாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை,தவளக்கிரி முத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை,சைவ வாலிப சங்க அறநெறிப்பாடசாலை மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

nallur1nallur2nallur3nallur4nallur5nallur6

15.08.2026 மற்றும் 16.08.2026 ஆம் திகதிகளில்  கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 2024,2025 ஆம் ஆண்டுகளிற்கான  தேசிய ஆக்கத்திறன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அவ்வகையில்,எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களும் வெற்றி பெற்று பரிசில்களை பெற்றுக்கொண்டார்கள்.

hindu program7hindu program2hindu program3hindu program4

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top