News & Events

24.09.2026  ஆம் திகதி தந்தை செல்வா ஆரம்ப பாடசாலையில் தரம் 3-5 மாணவர்களுக்கும் யா/ஊறணி கனிஸ்ரா ஆரம்ப பாடசாலையில் தரம் 1-5 மாணவர்களுக்கும் யா/ மகாஜனக் கல்லூரி தரம் 4-5 மாணவிகளுக்கும் யா/ குளமங்கால் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp Image 2026 09 24 at 14.12.42

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையில் 21.09.2026 அன்று "திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணையும் , குடும்ப உளவளத்துணையும்" எனும் தொனிப்பொருளில் கிராம அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.           இதில் யாழ் பல்கலைக்கழக மெய்யியல் மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்       Dr. K.Kajavinthan வளவாளராக பங்குபற்றியிருந்தார்.

counsling1

2025ஆம் ஆண்டு வடக்கு மாகாண தொழில்துறை திணைக்களத்தினால் நடைபெற்ற "சில்ப அபிமானி" போட்டியில் எமது பிரதேச செயலகத்தை சேர்ந்த முயற்சியாளர்கள் மாகாண விருதுகள் ஒன்பதையும்  தேசிய விருதுகள் மூன்றையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.அவர்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த 18/9/2026 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.அத்துடன் 2026ம் ஆண்டு வடக்கு மாகாண தொழில்துறை திணைக்களத்தினால் நடைபெற்ற "சில்ப அபிமானி" போட்டியில் எமது பிரதேச செயலகத்தை சேர்ந்த முயற்சியாளர்கள் மாகாண விருதுகள் முதலாம் இடம் இரண்டு , இரண்டாம் இடம் இரண்டு ,மூன்றாம் இடம்  நான்கு , மற்றும் சிறப்பு பரிசு பதினான்கு,மொத்தமாக இருபத்தியிரண்டு பரிசுகளைப்பெற்றுக்கொண்டுள்ளனர்.

awardinghandicraft1awardinghandicraft2awardinghandicraft3awardinghandicraft4awardinghandicraft5awardinghandicraft6

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தில்   19.09.2026  ஆந் திகதி காங்கேசன்துறை கடற்கரையை  தூய்மைப்படுத்தும் செயற்பாடு நடைபெற்றது.

இதில் கடற்படையினரும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் .

atthamakks1atthamakks4atthamakks2atthamakks3

 

10.09.2026 அன்று  கைவினைப்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி மல்லாகம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 20 பயனாளிகள் பங்குபற்றினர்.

handcraft1handcraft3handcraft2

 

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top