News & Events

யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019

யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019 இறுதிப் போட்டி 01.08.2019 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச அதிபர் மதிப்பிற்குரிய திருவாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் அரச அதிபர் போட்டியில் யாழ் மாவட்டச் செயலகமும் 15 பிரதேச செயலகங்களும்  போட்டிகளில் கலந்து கொண்டன. இப் போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செயலகம் முதலாமிடத்தையும் எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. எமது பிரதேச செயலகம் எமது பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் வழிகாட்டலிலும் ஊக்கப்படுத்தலிலும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பிலும் தொடர்ச்சியாக 3 வருடங்களாக 2 ம் இடத்தினையும் பிரதேசங்களின் மத்தியில் 1ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

67434236 435069310423768 562750628284071936 n  67444765 435069087090457 1049971718342311936 n

67614520 435069007090465 4522295065959202816 n  67710655 435069377090428 3026945765986533376 n

67873526 435070090423690 7336055500234031104 n

மாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது

67372653 428672104396822 1344769043655032832 n

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் "youth with talent சிரமசக்தி செயற்திட்டம்'" 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கல் விழாவில் தெல்லிப்பளை பிரதேசத்தின் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் செயற்படுத்திய "கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கான இளைப்பாறு மண்டபம் அமைத்தல் "எனும் செயற்திட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றமைக்காக இச் செயற்திட்டத்தினை தெரிவு செய்து இளைஞர் சேவை உத்தியோகத்தரையும் இளைஞர் கழகத்தினரையும் நெறிப்படுத்தியமைக்காக மதிப்புக்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது  வழங்கும் நிகழ்வு 19.07.2019 அன்று நடைபெற்றது. 

சமய மேம்பாட்டு வேலைத் திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்கள பன்னிரண்டு மாத விளக்கு ஆனி மாத சமய மேம்பாட்டு வேலைத் திட்டம் பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலையில் திகதி 21.06.2019 எமது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு. சத்தியரூபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

64768649 414454872485212 2378654035004620800 n  64871826 414454862485213 4127751119516467200 n65392187 414454895818543 7647295674047791104 n

அமெரிக்க செனட் பிரதிநிதிகள் விஜயம்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  மீள்குடியேற்ற பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க செனட் பிரதிநிதிகள் J/251 மயிலிட்டி துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் மயிலிட்டி துறைமுகத்தினையும் மற்றும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டதுடன்  J/246 மயிலிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில்  மீள்குடியேற்ற பணிகள் குறிந்து நேரடியாக பார்வையிட்டதுடன் வீட்டுத்திட்ட வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மகளுடனும் மற்றும் அங்கு கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுடனும் நேரடியாக கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர். 

65780366 421584068438959 2634218998731898880 n 65924873 421582371772462 7106547269867929600 n 65937249 421583981772301 6971961901257326592 n 66189295 421584278438938 5450658667965710336 n 66023333 421584675105565 561819569568612352 n 65827718 421584615105571 6676077897679110144 n

---தேசிய போதை ஒழிப்பு வாரம்---
யூன் மாதம் 23ம் திகதியிலிருந்து யூலை மாதம் 01ம் திகதி வரை. தேசிய பாதுகாப்பிற்கு உதவுவதற்காக எங்கள் கிராமத்தை பாதுகாப்போம். எனும் தொனிப்பொருளில் மேற்படி நிகழ்ச்சியானது முதலாவது நாள் நிகழ்ச்சியாக 24.06.2019 அன்று காலை 09.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்  திருமதி. கோ. சங்கீதா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

எமது மக்களின் பெறுமதியான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மதுசாரம் மற்றும் சிகரட் கம்பனிகளின் தந்திரோபாய ஏமாற்றும் வித்தைகளுக்கு ஏமாந்து பெறுமதியற்றவனாக சந்தோசமற்ற நிம்மதியற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஏமாளிகளை வைத்து இலாபமடைபவர்கள் சாராய பியர் மற்றும் சிகரட் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஆவார்.

எமது நாட்டில் ஒரு வருடத்துக்கு சராசரி 40 ஆயிரம் பேர் சாராயம், பியர், கள்ளு மற்றும் கசிப்பு போன்ற மதுசார வகைகளை குடிப்பதனால் இறப்பதாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகரட், பீடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதனாலும் மரணமடைவதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கின்றது.

சாராயம், சிகரட் பாவனையால் உடலில் நோய்த்தாக்கங்கள் மற்றும் மரணம் என்பன ஏற்படுவதுடன் அது மனிதனுக்கும் சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவே இந்த கொடிய அரக்கனை எமது சமூகத்தில் இருந்து விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் கருத்திற்கமைவாக உதவிப்பிரதேச செயளாலரின் உரையுடன் போதைப்பொருளின் அபாயம் எனும் காணொளியும்கூட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நிர்வாக உத்யோகத்தரும் மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

IMG c508c3c8bf6166e5ee9f80f202bb55f4 V  IMG cfd451c7b2e51e1dc0bdcaa5cbf1d30c VIMG 04777f014fac4add131ddb0e2b2ca0d1 V

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top