News & Events
- විස්තර
சமுர்த்தி பயனாளிகள் கௌரவிப்பு
தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வும் 18.06.2019 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது வாழ்வாதார உதவி வழங்கல் வீட்டுதோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் இளம் விவசாயிகளுக்கான கௌரவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கி நடைபெற்றது. அதனடிப்படையில் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பாக முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இளம் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 39 வீட்டுத்தோட்ட பயனாளிகள் தலா ரூபா 5000 வீதமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் 30 சமுர்த்தி பயனாளிகளுக்கு மக்கள் பங்களிப்புடன் வாழ்வாதார உதவிகளாக விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலபொதுமக்களும் கலந்துகொண்டனர்.

- විස්තර
சிறுவர் பூங்கா விடுவிப்பு
வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை மத்தி கிராம அலுவலர் (J/234) பிரிவில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ( 6.9 பேர்ச்) இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மக்களின் பாவணைக்காக மீளவும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரத்தை இன்று காலை (10.06.2019) எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களிடம் 515 படைப்பிரிவின் மக்கள் விவகார அதிகாரி கே. சத்யபால RSP அவர்களினால் உத்தியோகர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
- විස්තර
சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு
நாடளாவிய ரீதியில் புதிய சமுர்த்திப் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம் பெறும் நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 4195 பயனாளிகளிற்கு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 05.06.2019 வியாழக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லுாரியில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலளாளர் திருமதி கோ.சங்கீதா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் ஏனைய பிரமுகர்களும் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




- විස්තර
தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் மரம் நடுகை
தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற் திட்டங்களின் மற்றுமொரு செயற்றிட்டமாக தையிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மர நடுகையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் 04.05.2019 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



- විස්තර
தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம்
தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கடல் சார் வளங்களை பாதுகாத்தலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவகற்றலும் எனும் செயற்றிட்டம் மிகவும் சிறப்பாக 31.05.2019 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

















