News & Events
- விவரங்கள்
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின நிகழ்வு 07.10.2026 ஆம் திகதி வயாவிளான் கரிசல் பூங்காவில் நடைபெற்றது
எமது பிரதேச செயலகத்தின் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் அவர்களால் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றித்த இவ் அங்குரார்ப்பண நிகழ்வு, சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுவலுடையோர் என அனைவரையும் அன்பாலும் மதிப்பாலும் அரவணைக்கும் சமூகத்தின் உயரிய பண்பினை எடுத்தியம்பியது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்,மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுவலுயுடையோர் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டோர் என சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சுயதொழில் முயற்சியாளருக்கான விருதும்,மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு மட்டத்தில் இருந்து சமூகமட்டத்தில் இணைக்கப்பட்டு சிறப்பாக செயற்படுத்திய அங்கத்தவருக்கும், மாகாண மட்ட பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுதிறனாளி பாடல் கலைஞனுக்கான விருதும், 2026 ஆம் ஆண்டு 15 மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கிய நிறுவனம் மற்றும் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம் வந்த முதியோர் சங்கம்,முதியோர் பாட்டு போட்டியில் மூன்றாவதாக வந்த மூத்தோருக்கான விருதும் விருந்தினர்கள் கரங்களால் வழங்கப்பட்டு சிறுவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு .மதிய போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.









- விவரங்கள்
உள்விவகார அலகு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊழல் தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு .கைலாசபிள்ளை சிவகரன் அவர்களினால் பிரதேச மாநாடு மண்டபத்தில் 05.10.2026 ஆம் திகதி 9.00 மணிக்கு இடம்பெற்றது.



- விவரங்கள்
03.10.2026 ஆம் திகதி தேசிய ஆக்கத்திறன் வடக்கு மாகாண மட்ட போட்டிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற எமது பிரிவினைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றியிருந்தார்கள்.
- விவரங்கள்
04.10.2026 ஆம் திகதி யா/மல்லாகம் மகாவித்தியாலயத்தில் தேசிய ஆக்கத்திறன் போட்டி நிகழ்வுகளான "சித்திரம் மற்றும் கட்டுரை" போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.அதன் பதிவுகள் சில.......


- விவரங்கள்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒழுங்குபடுத்தலுக்கமைவாக 30.09.2026 ம் திகதி முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

















