News & Events
- விவரங்கள்
நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக்கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "மனித மாண்பு நிறைந்த நேர்மையான சமூகம்" எனும் தொனிப்பொருளில் கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 29.07.2026 அளவெட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது .




- விவரங்கள்
தேசிய இளையோர் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தம்வசப்படுத்தியுள்ளனர்.இவ் அணியின் 12வீரங்கனைகள் எமது பிரதேசத்தை சார்ந்தவர்கள்

- விவரங்கள்
2026.07.23 அன்று திருமண மாலை கட்டுதல் தொடர்பான குழு தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியின் மூலம் திருமண நிகழ்வுகளுக்குத் தேவையான மாலைகளை தயாரிக்கும் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.இந்நிகழ்வில் 30 பயனாளிகள் பங்குபற்றினர்.



- விவரங்கள்
27.07.2026 ஆம் திகதி எமது பிரதேச செயலக முன்றலில் “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய வேலைத்திட்டம் தேசியக்கொடி ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது. அதில் நேர்மையான கலாசாரம் தொடர்பான முன் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன. உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டு பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டு அது தொடர்பான பதாகைகள் கிளை தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது.



- விவரங்கள்
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தில் ஒரு டிஜிற்றல் தொழில் முனைவோர் மற்றும் ஒரு பசுமைத்தொழில்முனைவோரையும் உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 22.7.2026 கல்லாரை கிராமத்தில் நடாத்தப்பட்டது.


















