News & Events

Annual Transfer

Access to justice

வடமாகாண மக்களுக்கு நீதியை சிறந்த முறையில் பெற்றுக்கொடுக்க நீதி அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

“நீதிமன்ற அபிமானத்துக்கு” திட்டத்தைத் தொடங்கி, மாகாணத்தில் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்துவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் ஜனவரி 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்.

நீதி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வடமாகாண மக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

நீதி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வடமாகாண மக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பங்குகொள்ளும் துறைகள் மற்றும் அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பின்வருமாறு.

திணைக்களங்கள்

 சேவைகள்

ஆவண விபரங்கள்
நீதி அமைச்சின் - தொழிலாளர் தீர்ப்பாயம்,சமாதான நீதவான், தீடீர் மரண விசாரணை,
சத்திய பிரமாணத்திற்கான ஆணையாளர்,அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்.

* தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்

 வெளிநாட்டு அமைச்சின் மூலமான சத்தியபிரமாண சான்றளிப்பு pdfic2

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்

*  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.

* காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்,காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

 

சட்ட உதவி ஆணைக்குழு

* நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

* ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

 
இழப்பீட்டுக்கான அலுவலகம்
 

* புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

* சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

  pdfic2

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்

* இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 
குற்றம் மற்றும் சாட்சியங்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
 

* குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 pdfic2

ஆட்பதிவுத் திணைக்களம்

* புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட   

       விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்

*   ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

*   அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

பதிவாளர் நாயகத் திணைக்களம்

*   காலம்கடந்த பிறப்பு, இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்

 

சமூகச் சீர்திருத்த அலுவலகம்

சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களம்

அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.

அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

 
மத்தியஸ்த சபை

* மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)

* ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

 

சிறைச்சாலைத் திணைக்களம்

சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

*   சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்

*   கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

 
  சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.  pdfic2
தொழில் பயிற்சி அதிகார சபை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்  
மேலும் கடன் இணக்க சபைத் திணைக்களம் ,பனை அபிவிருத்தி சபை ,புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உட்பிரிவுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top