News & Events

சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஞாயிறு மறைப்பாடசாலை மாணவர்களுக்கான மறைக்கல்வி தினமானது 27.09.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை ஞாயிறுமறைப்பாடசாலை மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களினால் சிறப்பிக்கப்பட்டது.

sundayschool2sundayschool1sundayschool3

தேசிய  இளைஞர்சேவை மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதேச  இளைஞர் முகாம் யா/கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் மூன்று நாட்கள் தங்குமிட வசதியுடன் நடைபெற்றது.

WhatsApp Image 2026 10 08 at 11.08.32yso1yso2

 

 

“தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்”சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத் திட்டம் நிகழ்வு அறிக்கை

24.09.2026 (வியாழக்கிழமை) அன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” – சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத் திட்டத்தின் கீழ், J/212 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கல்லலாரை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்காக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வீட்டுத் தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக தெல்லிப்பழை பிரதேசத்தின் விவசாய போதனா ஆசிரியர் திருமதி நவநீதன் சுஜாதா அவர்கள் கலந்து கொண்டு, இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தைச் சிறந்த முறையில் அமைத்தல், பராமரித்தல் மற்றும் பயனடைவது தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளையும் தெளிவுரைகளையும் வழங்கினார்.

மேலும், வீட்டுத் தோட்டச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், குடும்பச் செலவினங்களைக் குறைத்தல், மனைப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் குடும்ப வருமானத்தை அதிகரித்தல் போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்குபற்றிய தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளர்களுக்கு வீட்டுத் தோட்டச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதைகள் அடங்கிய விதைப் பொதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பயனாளர்கள் தமது வீடுகளில் இயற்கை முறையிலான வீட்டுத் தோட்டங்களை அமைத்து, அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்பெறுவதற்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், குடும்ப மட்டத்தில் உணவு உற்பத்தியை அதிகரித்து, உணவுப் பாதுகாப்பையும் குடும்பப் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள நடவடிக்கையாகவும் இத்திட்டம் அமைந்தது.

இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வளவாளர், தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து பயனாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

pdo1pdo2pdo4

 

 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  கடந்த  2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன்  போட்டியில் வெற்றியீட்டிய எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கணேசா அறநெறிப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன்  துலக்சன் என்பவருக்கான விருதினை நேற்றைய தினம்   மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கிக்கெளரவிக்கப்பட்டது.அத்துடன்இரு ஆண்டுகளிலும் கதாப்பிரசங்க நிகழ்வில் முதலிடம் பெற்றுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

hindu1

உள்விவகார அலுவல்கள் பிரிவு  தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்  24.09.2026 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்  உள்விவகார அலுவல்கள் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

IAU4IAU2IAU3

உட்பிரிவுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top