News & Events
- விவரங்கள்
டெங்குக் கட்டுப்பாடு தொடர்பான விசேட கூட்டம் 04.11.2019 தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட டெங்குக் கட்டுப்பாடுக் குழு உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
- விவரங்கள்
கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா 2019 மிகச் சிறப்பாக 04.10.2019 வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சண்முகராசா சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. இ. இளங்கோவன் (செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக திரு சி. ரமணராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் இந்துநாகரீகத்துறை இந்து கற்கைகள்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அத்துடன் கௌரவ விருந்தினர்களாக திரு. தி. வரதன் (அதிபர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) மற்றும் கலாபூசணம் மு. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பான கலை நிகழ்வுகளோடு கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
- விவரங்கள்


- விவரங்கள்
கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா.
- விவரங்கள்
சட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை
தேசிய ஒருமைப்பாடு. அரச கரும மொழிகள். சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சட்ட ரீதியான ஆவணங்களை பொதுமக்களிற்காக இலவசமாக வழங்கும் விசேட நடமாடும் சேவை 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை மல்லாகம் மகா வித்தியாலயத்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நடமாடும் சேவையில் பெற்றுக் கொண்ட சேவைகள்
01) பிறப்புச் சாண்றிதழ்களை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல்(ஆங்கிலம்/ சிங்களம் /தமிழ்)
02) பிறப்புச் சாண்றிதழ்களில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொடுத்தல்
03) பிறப்புச் சாண்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
04) விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்
05) பிறப்பு சாண்றிதழ் இல்லாதவர்களிற்கு அனுமான சாண்றிதழ் வழங்குதல்
06) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்தல்
07) அரச காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
08) கமநல சேவை தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
09) ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
10) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி
11) வரிப்பணம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
12) அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
13) ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
14) நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
இச் சேவையின் ஊடாக மக்கள் நிறைவான பயனுள்ள சேவையினைப் பெற்றுக் கொண்டனர்.





















